Amazon

Wednesday, 10 June 2015

அழியாத.16 வயதினிலே கோலங்கள் ?!!

அழியாத.16 வயதினிலே கோலங்கள்!!!

199...

அதிகாலை 7.30..
ஆர்வமாய் மோர் வாங்க
நான்

பக்கத்து சந்து
பால்ய பருவம்
பதின்ம வயது

எதிர் எதிரே
தண்ணீர்
குடத்துடன் அவள் !!

ஆளை கொல்லும் கண்கள்
ஓல்லி உருவம்
சிவப்பு கண்ணம்

சின்ன இடை
துள்ளும் நடை
ரோஸ் உடை !!

அவள் குடம் தண்ணீர்
தழும்ப
அலையாய்
என் மனம் ..

அவள் நீலநிற பாவாடை
நீரில் நனைய
என் மனம் குளித்தது..

உயிர் மெய் இல்லா
தமிழ் போல்
உயிர் உடல் இல்லா
சுயம் ஆனேன்..

அவள் மின்னல் கண்கள்
சிவகாசி அடைமழையில் நான்.

நொடிகளில் சந்திப்பு..
இதயத் துடிப்பில் அவள் !!

10 வருடம் கழிந்தன !!!

2003 december
 அழகி படம் பார்க்கிறேன் !!

நாட்களின் மரணம்
வருடங்களின் படிமம்!! (Fossil)

ஆழ்மன இடுக்கில்
துளியாய் இருந்தவள்
சுனாமியாய் வெளி வந்தாள் !
என் கண்களில்...

  

No comments:

Post a Comment