Amazon

Monday, 11 January 2016

London job guide

Uk London jobs help sites

Www.jobsite.co.uk

www.cvlibrary.co.UK

www.reed.co.UK

Www.evolutionjobs.co.uk

Www.rtrs.co.uk

Www.linkedin.com you can search as well
Register in this website for job openings.currently the industry skills such as Java,C++,Automated testing has openings.
Mention that you need visa sponsor.

From the consultant i heard that above 8+ years experience are chosen here.

80% jobs need a visa but remaining 20% you can give a try to qualified for interview.

UK taxes are huge but cost of living depends on how you chose place etc.

If you have more queries you can reach me at bsvijayan@gmail.com

Saturday, 29 August 2015

The monk who sold his Ferrari !!! Excerpts

From "The monk who sold his Ferrari "

1.ஒவ்வொரு முறை தொலைபேசி அடிக்ககும் போது எடுப்பதை நிறுத்து.

2.மனம் ஓரு தோட்டம்.நல்ல எண்ண விதைகளை தூவு.

3.வேதனை சக்தி வாய்ந்த ஆசான் !!!

4.சூரியன் உதயமாவை கவனித்துப் பார்.!

5.தூங்கும் போக முன் 10நிமிசம் எழுந்திரிக்கும் முன் 10 நிமிசம் திட்டமிடு.

6.8 மணிக்கு பின் உணவு, எந்த விவாதத்திற்க்கும் இடமளிக்காதே!!

7.கைக்கடிகாரம் இல்லா ஓரு நாள் செலவிடு.

8.எவரும் எதிர்கொள்ளும் எதிர்கொண்ட பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கப்பட்டவை!

9.அறிவே சக்தி.!

10.மகிழ்ச்சி ஆக இருந்தால் சிரிக்காதே!
சிரிப்பதனால் மகிழ்ச்சி அடை!

11.அதிர்ஷ்டம --- தயார் செய்தல்,வாய்ப்பு அவற்றின் இனணப்பு ..

12.ஓரு நாளில் 60,000 எண்ணங்கள் நம் சிந்திப்பவை ,95 % பிந்தைய நாளில் நாம் எண்ணியதே.


Saturday, 22 August 2015

⁠⁠⁠சுவாசம்/மூச்சு


1.முனிவர்கள் தியானம் செய்யும் போது கையில் தண்டம் வச்சிருந்தாங்க ,எதுக்கு?

To activate left nostril breath.always.

2.தியானம் செய்யும் போது நிமிசத்துக்கு சுவாசம் குறையுமா ? கூடுமா? ஏன் ?
படிப்படியாக குறையும்..metabolism decrease and keep you in peace.

3.புத்தர் மூச்சு விடுறத மட்டும் கவனிச்சு தியானம் பண்ணச் சொன்னார் ஏன்?
You will focus on மூலாதாரம் automatically.breath goes down hit all core 5 chakras and touch kundalini/mulathara and come back.


4.மூச்சு (inhale,exhale)கவனிச்சு சிந்திக்க முடியுமா?

You can't.if you concentrated on breath your thinking will stop..try think donkey and concentrate on breath inhale exhale.you will forget donkey thinking for 5 minutes

5.புற்றுநோய்க்கும் மூச்சு விடுறதுக்கும் என்ன சம்பந்தம்.?

ஆழ்ந்து மூச்சுவிட பழகிக் கொள்ளுங்கள்..
Cancer come because of anaerobic cells.if your cells are oxygenated then no cancer cells.
Oxygen குறைபாடு புற்றுநோய் காரணி..நோபல் பரிசு பெற்ற Dr.Warburg  கண்டுபிடிப்பு.

Thursday, 23 July 2015

காரிருளில் கதிரவன் கரைய
வானக் கரும்போர்வையில்
வெண்மதி உலாவற
என் நினைவுகள் உயிர்பெற
நடுசாமம்(12 மணி)
தூக்க கலக்கத்தில்
நொடி முள் தள்ளாட
கடிகார மணிமுள்
மெதுவாக கீழே சரிய
மனம் பின்செல
பேனா முன் ஓட
சிவகாசியின் தண்ணிர்க்கதைவருடம் எப்போதும்
பெய்யும் மழை பொய்க்கும்
முக்காலம் வறண்ட வசந்த காலம்
தடம்புரண்ட தண்டவாள
ரயில் பெட்டிகள்போல்
காத்திருக்கும் வாய்
பிளந்தகுடங்கள்
முன்னிரவு ஊறிய உப்புநீரை
அடிப்பம்பில் முன்னேற்றி
பின்னிரவில் சேமிப்பர்

அயர்ந்த சூரியன்
கண் விழிக்கும் முன்
அதிகாலை எழுந்த
உக்கிரன் நாவு நீளும்
பெரிய குளம்,சின்ன குளம்
குட்டை, ஆறு திங்கும்.

மதியம் வெறிகொண்ட
பிளிறு போல்
திமிறித் தெறிக்கும்
உடலை ஊடுருவி
தேகக் குருதிநீர் பார்க்கும்.
உமிழ்நீர் கேட்கும் !

பசி அடங்கா சூரியன்
விண் கொண்டு
அழுதால் உண்டு மழை

விண்ணீர் கானல்நீர்
மண்ணீர் கண்ணாமூச்சி காட்டும்.
எனினும் நாங்கள்
கண்ணீர் காணோம்..

சிவகாசி பூமிக்கும் கோரப்பசி
புல் பூண்டு தாவரம்
தின்று வளரும்
கந்தக பூமி.

வெண்மதியின் ஓளி
அடிப்பம்பின் ஓலி என்
ஆழ்மனதில் வலி
இன்றும் எங்கோ !

தொடரும்...
"வெயில்" படம் ரொம்ப பிடிச்சு இருந்ததுனா கண்டிப்பா
ராமகிருஷ்ணன் "நெடுங்குருதி " நாவல் படிச்சுப் பாருங்க.
ஹிமாலயக்குளிரிலும் வெயில் உக்கிரத்தை அனுபவிப்பீர்கள். !

Thursday, 11 June 2015

Our Group towards social charity initiative

ஊர் கூடி தேர் இழுப்போம்..முடிஞ்ச உதவி ஊருக்கு செய்வோம்..
இந்த சர்வே fill பண்ணுங்க..உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது..

Wednesday, 10 June 2015

அழியாத.16 வயதினிலே கோலங்கள் ?!!

அழியாத.16 வயதினிலே கோலங்கள்!!!

199...

அதிகாலை 7.30..
ஆர்வமாய் மோர் வாங்க
நான்

பக்கத்து சந்து
பால்ய பருவம்
பதின்ம வயது

எதிர் எதிரே
தண்ணீர்
குடத்துடன் அவள் !!

ஆளை கொல்லும் கண்கள்
ஓல்லி உருவம்
சிவப்பு கண்ணம்

சின்ன இடை
துள்ளும் நடை
ரோஸ் உடை !!

அவள் குடம் தண்ணீர்
தழும்ப
அலையாய்
என் மனம் ..

அவள் நீலநிற பாவாடை
நீரில் நனைய
என் மனம் குளித்தது..

உயிர் மெய் இல்லா
தமிழ் போல்
உயிர் உடல் இல்லா
சுயம் ஆனேன்..

அவள் மின்னல் கண்கள்
சிவகாசி அடைமழையில் நான்.

நொடிகளில் சந்திப்பு..
இதயத் துடிப்பில் அவள் !!

10 வருடம் கழிந்தன !!!

2003 december
 அழகி படம் பார்க்கிறேன் !!

நாட்களின் மரணம்
வருடங்களின் படிமம்!! (Fossil)

ஆழ்மன இடுக்கில்
துளியாய் இருந்தவள்
சுனாமியாய் வெளி வந்தாள் !
என் கண்களில்...